பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பாலமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Update: 2021-07-06 20:40 GMT
கரூர்
நொய்யல்
கிருத்திகையையொட்டி கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் பால சுப்பிரமணியருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்