ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை

மதுரையில் ஓய்வு றெ்ற அரசு அதிகாரி வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-07-06 19:41 GMT
மதுரை
மதுரையில் ஓய்வு றெ்ற அரசு அதிகாரி வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி
மதுரை ஆனையூர் எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 68), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது தாயாரை பார்க்க புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மனைவியுடன் சென்றார்.
பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் தியாகபிரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நகை, பணம் கொள்ளை
அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 24 பவுன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்