மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் சாவு

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் சாவு

Update: 2021-07-06 18:37 GMT
வேலூர்

அணைக்கட்டு தாலுகா கல்லாங்குளம் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சுரேஷ் (வயது 15), 10-ம் வகுப்பு படித்துள்ளான். தற்போது பள்ளி திறக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளான்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருடன், வேலைக்கும் சென்று வந்துள்ளான். இந்த நிலையில் தொரப்பாடி கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் வேலைக்காக சுரேஷ் சென்றுள்ளான். அந்த வீட்டில் பல்பு மாட்டிக்கொண்டிருந்த போது திடீரென அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்