வலங்கைமான் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
வலங்கைமான்:-
திருவாரூர் மாவட்டம், கீழவிடையல் ஊராட்சி கருப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் தர்மராஜ் (வயது37). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்த்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.