நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-07-06 16:34 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

கொள்முதல் நிலையங்கள்

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள ஆலைகளுக்கும் நெல் மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

1,000 டன் நெல்

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1,000 டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 80 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்