நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை
நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இங்கு மதுபானங்கள் திருட்டு போகாமல் இருக்கும் வகையில் இரும்பு தகரம் கொண்டு வெல்டிங் வைத்து பூட்டப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு தளர்வு காரணமாக 76 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மது பிரியர்கள் ஆர்வத்துடன் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மொத்தமாக மதுபானங்களை வாங்கி செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் ஊரடங்குக்கு பின்னர் மதுபானங்கள் விற்பனை அதிகமாக உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறும்போது, நீலகிரியில் நேற்று முன்தினம் 76 டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 74 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. மதுபானங்கள் போதுமான அளவு குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.