மயிலாடுதுறையில் சிறுமியை கடத்திய டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-06 16:14 GMT
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே கொழையூர் தெற்கு மேல பண்டாரவடை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது23). நெல் அறுவடை எந்திர டிரைவரான இவர், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்