பசு மர்மச்சாவு
தேனியில் பசு மாடு ஒன்று புதருக்கு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தேனி:
தேனி குட்செட் தெருவை சேர்ந்த ஜெயகாளை மனைவி ராஜேஸ்வரி. இவர் 9 மாடுகள் வளர்த்து வந்தார். மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது ஒரு பசுமாடு மாயமானது.
அதை தேடிப்பார்த்த போது தனது வீட்டுக்கு அருகில் வாய்க்கால் பகுதியில் உள்ள புதருக்குள் பசு மாடு இறந்து கிடந்தது. மாட்டின் உடலை பார்த்த பின்பு அதன் சாவில் சந்தேகம் இருப்பதாக தேனி போலீஸ் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுமாட்டின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.