வாகனத்தில் செல்லும் போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனத்தில் செல்லும் போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

Update: 2021-07-06 13:10 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனத்தில் செல்லும் போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
சாலை விதிகள்
தூத்துக்குடி மாவட்ட போலீசார் 150 அரசு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த வாகனங்களின் பராமரிப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அலுவலக வளாகத்தில் வைத்து ஆய்வு செய்தார். 
அப்போது வாகனங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார். சிறப்பாக பராமரிப்பு செய்த 15 பேருக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், 4 சக்கர வாகனம் ஓட்டும் போலீசார் கட்டாயம் சீட் பெல்ட்டும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும் போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எந்தவித விபத்தும் ஏற்படாத வகையில் வாகனத்தை ஓட்ட வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, மோட்டார் வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், அந்தோணி ராபின்ஸ்டன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ஆய்வு
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்பந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கோர்ட்டு அலுவல்கள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வு கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் அரசு வக்கீல்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்