பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-06 06:11 GMT
திருவள்ளூர்,

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க.சார்பில் திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.கவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் புஜ்ஜி முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை, கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்