தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-05 19:52 GMT
மதுரை, ஜூலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன், மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், அறிவிக்கப்படாத மின் வெட்டை தவிர்க்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
 மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாண்டியன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஷ்ணு பிரித், போக்குவரத்து பிரிவு பொருளாளர் குணசேகர பூபதி, பகுதி செயலாளர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்