வெப்படை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ.1.15 லட்சம் பறிமுதல்
வெப்படை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது ரூ.1.15 லட்சம் பறிமுதல்
நாமக்கல்:
வெப்படை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் சூதாட்டம், கோழிச்சண்டை போன்ற குற்றச்செயல்களை முழுவதுமாக தடுக்கும் நோக்கில் போலீசார் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் வெப்படை போலீசாருக்கு மக்கிரிபாளையத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்புசாமி (வயது 41), வினோத்குமார் (37), மாதேஸ்வரன் (39), செல்வராஜ் (51) மற்றும் ரவி (54) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 970 மற்றும் சூதாட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடுமையான நடவடிக்கை
இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சூதாட்டம் மற்றும் கோழிச்சண்டை நடைபெறுவது தொடர்பான தகவலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட தனிப்பிரிவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.