விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Update: 2021-07-05 18:55 GMT
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி திவ்யா (வயது 23) இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திவ்யா வீட்டில் தனியாக இருந்தபோது  விஷம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது தாயார் பேச்சியம்மாள்(43) அளித்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்