மயில் வேட்டையாடிய 4 பேர் கைது

மயில் வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-05 18:32 GMT
நயினார்கோவில்,
பரமக்குடி, நயினார்கோவில், காடரந்தக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகஅளவில் மயில்கள் உள்ளன. விளை நிலங்களில் விளையும் உணவுகளை உண்டு இந்த மயில்கள் வாழ்ந்து வருகின்றன. சமீப காலமாக தொடர்ந்து இந்த பகுதியில் மயில்கள் வேட்டை யாடப்படுவது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து நயினார்கோவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டியூர் பகுதியில் மயிலை வேட்டை யாடிய  முதுகுளத்தூர் அருகில் உள்ள வீரம்பல் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார், இயேசுதாஸ் உள்பட 4 பேரை பிடித்து கைது செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனசரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்து மயில் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்