கொத்தனாரிடம் பணம் பறித்த 4 பேர் கைது
கொத்தனாரிடம் பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன் (வயது39). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர் பொருட்கள் வாங்க சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்து சென்றனர்.இதுதொடர்பாக குற்ற பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராமநாதபுரம் அருகே பதுங்கி இருந்த வாலாந்தரவை அம்மன்கோவில் சூர்யா (வயது22), பாண்டி மகன் அஜித் (23), மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.ஆயிரம் பணத்தினை போலீசார் பறிமுதல் செய்தனர்.