காட்பாடியில் வேட்டைக்கு சென்ற பட்டதாரிகள் உள்பட 8 பேர் கைது

காட்பாடியில் வேட்டைக்கு சென்ற பட்டதாரிகள் உள்பட 8 பேர் கைது

Update: 2021-07-05 18:16 GMT
வேலூர்

காட்பாடியை அடுத்த மூலகசம் ஓடைப்பகுதி அருகே காட்பாடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காட்டுபூனை, முயலை நாட்டுதுப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து வேலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காட்பாடி செங்குட்டை பகுதியை சேர்ந்த நரிக்குறவர்களான தேவதாரிசிங் (வயது 55), குட்டி (26), அன்பு (31), பகவதி (21), பெரியபுதூரை சேர்ந்த ஆனந்தன் (51), பள்ளிகுப்பத்தை சேர்ந்த பழனி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதேபோல காசிகுட்டை பகுதியில் விருதம்பட்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்றனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் லத்தேரியை சேர்ந்த இன்பகுமார் (26), ஜீவானந்தம் (21) ஆகியோர் என்பதும், பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்