கண்ணமங்கலத்தில் ரேஷன் கடையை பெண்கள் முற்றுகை

கண்ணமங்கலத்தில் ரேஷன் கடையை பெண்கள் முற்றுகை

Update: 2021-07-05 17:53 GMT
கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய  கணக்கெடுப்பு நடந்தது. தற்போது அந்த பட்டியலில் உள்ள பெரும்பாலானவர்களை வசதி படைத்தவர்களாக சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி தங்களை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என ராமகிருஷ்ண உடையார் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடையை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்