விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

போடியில் விஷம் குடித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-05 17:33 GMT
போடி: 

போடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 66). இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை மகன் முனிராஜ் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்