கோவில் பூசாரிகளுக்கு கொரோனா கால உதவித்தொகை வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் மனு

கோவில் பூசாரிகளுக்கு கொரோனா கால உதவித்தொகை வழங்கக்கோரி சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-07-05 17:17 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவிடம் கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பூசாரிகளுக்கும் கொரோனா கால உதவித்தொகை வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக பூசாரிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். 

பூசாரிகள் நல வாரியத்தை செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்தவும், கோவில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், கிராம கோவில் பூசாரிகளை இணைத்து கொள்ள வேண்டும்.  அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சாதி, மத வன்கொடுமைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் வாழும் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.

 கோட்ட அளவில் சப்-கலெக்டர் தலைமையில் விழிகண் மற்றும் கண்காணிப்பு குழுவை விரைவில் ஏற்படுத்த வேண்டும். பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சரகத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை முறையாக கண்காணித்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்