பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள எருமாட்டில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக காணப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் தினேஷ்குமார் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் சீஜா ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.