குஜிலியம்பாறை அருகே ஷட்டர் பழுதடைந்ததால் தடுப்பணையில் வீணாகும் தண்ணீர்

குஜிலியம்பாறை அருகே ஷட்டர் பழுதடைந்ததால் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

Update: 2021-07-05 15:33 GMT
குஜிலியம்பாறை, ஜூலை.6-
குஜிலியம்பாறை அருகே பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட விராலிப்பட்டி குளத்தில், கடந்த ஆண்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வர்ணம் பூசுதல், நடைபாதை கற்கள் பதித்தல் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே மீதம் இருக்கிறது.
 இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ள குளத்தின் மூலம் விராலிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சேவகவுண்டச்சிபட்டி, காட்டமநாயக்கன்பட்டி, மஞ்சாநாயக்கனூர், இலுப்பபட்டி, சாணிபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் விராலிபட்டி குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அப்போது புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையின் ஷட்டர் திடீரென பழுதடைந்தது. இதனால் குளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் ஷட்டர் வழியாக வீணாகி வருகிறது. எனவே பழுதான ஷட்டரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்