100 மீனவ கிராமங்களை இணைக்கும் புதிய வழித்தடத்தில் திருவொற்றியூர்-கோவளம் இடையே நேரடி பஸ் வசதி
திருவொற்றியூரில் இருந்து கோவளம் வரை 100 மீனவ கிராமங்களை இணைக்கும் புதிய வழித்தடத்தில் நேரடியாக புதிய பஸ் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு 48 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்,
வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல பாரிமுனை சென்று அங்கிருந்து பஸ் மூலமாகவோ, ரெயில் மூலமாகவோ செல்கின்றனர்.
மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தினரும் போக்குவரத்துக்கு 2 அல்லது 3 வாகனங்கள் மாறி சென்று வருகின்றனர்.
எனவே திருவொற்றியூரில் இருந்து கோவளத்துக்கு நேரடி பஸ் வசதி தொடங்க வேண்டும் என்று திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் இதுபற்றி முதல்-அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
புதிய வழித்தடத்தில்...
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி திருவொற்றியூர் முதல் கோவளம் வரை உள்ள 100 மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருவொற்றியூர்-கோவளம் இடையே புதிய வழித்தடத்தில் நேரடியாக பஸ் (தடம் எண் 109டி) வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான தொடக்க விழா திருவொற்றியூர் புதிய பஸ் பணிமனையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.கே.நகர் எபினேசர், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் கலந்துகொண்டு இந்த புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ரூ.48 கட்டணம்
திருவொற்றியூரில் இருந்து புறப்படும் பஸ் சுங்கச்சாவடி, ராயபுரம், பாரிமுனை, தலைமைச்செயலகம், கண்ணகி சிலை, நொச்சிகுப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், வி.ஜி.பி. ஆகிய பகுதிகள் வழியாக கோவளத்தை சென்றடையும்.
இந்த வழித்தடத்தில் இரு வழிகளிலும் 2 பஸ்கள் தினமும் 4 முறை இயக்கப்படும். திருவொற்றியூரில் இருந்து கோவளத்துக்கு ரூ.48 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.