திருச்செங்கோடு அருகே கல்லூரி விரிவுரையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோடு அருகே கல்லூரி விரிவுரையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-07-04 20:26 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே கல்லூரி விரிவுரையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி விரிவுரையாளர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் கந்தசாமி (வயது 33). இவர் நாகப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கந்தசாமிக்கு, அமிர்தவள்ளி என்ற மனைவியும், ரிதன்யா என்ற மகளும், மகிழன் என்ற மகனும் உள்ளனர். 
இந்தநிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு அமிர்தவள்ளி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
விசாரணை
இது ஒருபுறம் இருக்க தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கந்தசாமி வேலை இல்லாமல் திருச்செங்கோட்டில் உள்ள தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். வேலை இல்லாதது, மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மனமுடைந்த கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விரிவுரையாளர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=========

மேலும் செய்திகள்