கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை கடந்தது: சேலம் மாவட்டத்தில் தொற்றுக்கு 7 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் நேற்று 245 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பதிப்பு 89 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்றுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-07-04 19:58 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 245 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பதிப்பு 89 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்றுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 245 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 73 பேர், எடப்பாடியில் 19 பேர், காடையாம்பட்டியில் 6 பேர், கொளத்தூரில் 8 பேர், கொங்கணாபுரத்தில் 14 பேர், மகுடஞ்சாவடியில் 5 பேர், மேச்சேரியில் 9 பேர், நங்கவள்ளியில் ஒருவர், ஓமலூரில் 20 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 9 பேர், சங்ககிரியில் 8 பேர், தாரமங்கலத்தில் 10 பேர், வீரபாண்டியில் 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 7 பேர், கெங்கவல்லியில் 2 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர், தலைவாசலில் 6 பேர், வாழப்பாடியில் 5 பேர், ஏற்காட்டில் 3 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மேட்டூர் நகராட்சியில் 8 பேர், ஆத்தூர் நகராட்சியில் 3 பேர், எடப்பாடி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் தலா ஒருவர், மற்றும் சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 5 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 3 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 4 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 3 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
112 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், மாவட்டத்தில் இதுவரை 86 ஆயிரத்து 25 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 112 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம் 1,609 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு 7 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 7 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,487 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்