மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை
விராலிமலை தாலுகா ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் இரவில் மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டாத்துப்பட்டி கோரையாற்றில் முல்லையூர் துலுக்கம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் விக்னேஸ்வரன்(வயது 28) என்பவர் அவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் அள்ளுவதை கண்ட போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.