திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகள்
கொரோனா பாதிப்பின் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஊரடங்கும் பிறப்பித்தது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஒன்றாக டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 253 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் பலரும் மது அருந்த முடியாமல் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே ஒவ்வொரு ஊரடங்கு அறிவிப்பின் போதும் வருகிற தளர்வுகளை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மற்ற சில மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வெளிமாவட்டங்களுக்கு சென்றும் பலர் மது அருந்தி வந்தனர்.
தடுப்புகள் அமைப்பு
இந்நிலையில் தற்போது ஊரடங்கு வருகிற 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பின் போது டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மே மாதம் 10-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
54 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பதால், மதுப்பிரியர்கள் பலரும் டாஸ்மாக் கடைகளில் குவியும் வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருமிநாசினியும் போடப்படுகிறது. ஒவ்வொரு கடைக்கும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.