பணிகளை 15-ந் தேதிக்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்துகூடுதல் கலெக்டர் எச்சரிக்கை

பணிகளை 15-ந் தேதிக்குள் முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து

Update: 2021-07-02 16:51 GMT
வந்தவாசி

ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வந்தவாசியில் நடந்தது. கூட்டத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், பசுமை வீடுகள் குறித்தும், அங்கன்வாடி கட்டிடங்கள், பஸ் நிறுத்தம் ஆகிய பணிகள் குறித்து ஆய்வுசெய்த அவர் 2016 முதல் 2020-ம் ஆண்டு வரைக்கும் வழங்கப்பட்டுள்ள பணிகளையும், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து வழங்கப்படும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

வருகிற 15-ந் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். இல்லை என்றால் ஒப்பந்ததாரர்களின் பணி ஆணைகள் ரத்து செய்து வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும். சரியாக பணி செய்யாத ஊராட்சி செயலர்களை பணி நீக்கம் செய்யும் சூழ்நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தார். நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆய்வு

இந்த கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்ட அவர் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆய்வு செய்து வேலைகளின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்