பஸ் இயக்க அமைச்சரிடம் கோரிக்கை
பெருநாழி - சென்னை இடையே பஸ் இயக்க அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கமுதி,
கமுதி மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 53 மற்றும் 60 ஊராட்சிகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் சென்னை மற்றும் கோவை பகுதிகளில் பணி செய்தும், தொழில் செய்தும் வருகின்றனர். இவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து செல்ல, நேரடி பஸ் வசதி இல்லாததால், மிகவும் சிரமப்படு கின்றனர்.
எனவே சாயல்குடி பகுதியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூர் செல்ல பெருநாழி வழியாக புதிதாக அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என்றும், கமுதியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் சசிக்குமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அப்போது தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.