ஜெயங்கொண்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை

ஜெயங்கொண்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

Update: 2021-07-01 20:53 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9.40 மணி அளவில் திடீரென்று சூறாவளி காற்றுடன், மழை பெய்ய தொடங்கியது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. மழையின் தாக்கம் குறைவாக இருந்தபோதும், பலத்த காற்று வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்