ஆட்டோ டிரைவர் பலி
வத்தலக்குண்டு அருகே காரும், ஆட்டோவும் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் ‘அ' பிரிவு அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது.அப்போது, திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி திண்டுக்கல்லை சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டி வந்த கார், ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் முத்தலிப் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பட்டிவீரன் பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார், நாட்ராயன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு முத்தலிப்பை கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.