பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
நடைபாதை ஆக்கிரமிப்புகள்
பெங்களூருவில் நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பெங்களூருவில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவிட்டு இருப்பதகாவும், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு இருப்பதாகவும் கூறினார்.
மாநகராட்சிக்கு உத்தரவு
அதற்கு நீதிபதிகள், "நடைபாதைகளை சரியான முறையில் பராமரித்து நகரவாசிகளின் பயன்பாட்டுக்கு வழங்குவது அரசின் கடமை. இது பொதுமக்களின் உரிமை. அதனால் நடைபாதைகளை அகற்ற அரசு மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கோர்ட்டே ஒரு குழுவை அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி இருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.