உடுமலையில் ஊர்களின் பெயர்களுடன் தகவல் பலகை

உடுமலையில் ஊர்களின் பெயர்களுடன் தகவல் பலகை

Update: 2021-07-01 20:08 GMT
உடுமலை
உடுமலையில் இருந்து 28 கி.மீ.தூரத்தில் கேரள எல்லையான சின்னாறு உள்ளது.கேரள மாநிலம் மூணாறு,மறையூர்,இடுக்கி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சின்னாறு மற்றும் உடுமலை வழியாக பொள்ளாச்சி, கோவை, திருப்பூர்,தாராபுரம், பழனி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக கார்களிலும், வேன்களிலும் அதிக அளவில் வருகின்றனர். அத்துடன் கேரளாவில் இருந்து இந்த வழித்தடத்தில் லாரிகளும் வருகின்றன.கேரளா மாநிலம் மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடுமலை வழியாக, அடுத்த ஊர்களுக்கு செல்ல உள்ளவர்கள் உடுமலையில் இருந்து எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் உடுமலை பகுதியில் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி வழிகேட்டு செல்கின்றனர்.உடுமலை தளிசாலையில் உள்ள தானியங்கி சிக்னல் பகுதிக்கு சென்றதும் எந்த பக்கம் திரும்புவது என்று திகைக்கின்றனர். 
 இடுக்கி மற்றும் திருமூர்த்தி மலை, அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருகிறவர்களின் வசதிக்காக உடுமலை நகரில் தளிசாலையில், நூலகத்திற்கு எதிரே மாநில நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பெயர்பலகை பொருத்தப்பட்டுள்ளது. 
 இந்த பணிகள் நேற்று நடந்தது.அந்த பெயர் பலகையில் பொள்ளாச்சிக்கு செல்ல 28 கி.மீ, பல்லடத்திற்கு 48 கி.மீ, தாராபுரத்திற்கு 38 கி.மீ, பழனிக்கு 36 கி.மீ. என்றும், அந்த ஊர்களுக்கு செல்வதற்கு எந்த திசையில் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்பெயர்பலகை வெளியூர்களில், குறிப்பாக மூணாறு, இடுக்கி உள்ளிட்ட கேரள பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்