காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அச்சன்புதூர்:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்சை நியமித்து உத்தரவிட்டார்.
இதையொட்டி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், டாக்டர் சந்திரகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட துணை தலைவர் சர்புதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.