போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

கடையநல்லூரில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-01 19:58 GMT
சங்கரன்கோவில்:
கடையநல்லூரைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் நம்பிராஜன் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் குருவிகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய உறவினரான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்