ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டன
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டன
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி, கார்த்திகை கோபுரம் ஆகிய 3 இடங்களின் அருகில் தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் கருவிகள் நேற்று பொருத்தப்பட்டது. பின்னர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி முன்னிலையில் கோவில் கார்த்திகை கோபுரம் அருகில் தீ தடுப்பு சாதனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பசலி ஆண்டு துவக்க நாளன்று பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் புதுக் கணக்கு தொடங்கப்படும். அந்தவகையில் இந்த பசலி ஆண்டிற்கான புதுக் கணக்கு தொடங்குவதற்கு முன் கணக்கு புத்தகங்கள் மற்றும் ரசீது புத்தகங்களை பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதியில் வைத்து நேற்று பூஜை செய்யப்பட்டது. பின்னர் புதுக்கணக்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து கோவில் அலுவலகத்தில் கோவில் பணியாளர்கள், தொழில் செய்வோர் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் பெயர்களில் காணிக்கை செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.