ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய இந்து இளைஞர் முன்னணியினர் கோரிக்கை

ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய இந்து இளைஞர் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-01 19:12 GMT
திருச்சி
திருச்சி
இந்து இளைஞர் முன்னணியின் மண்டல செயலாளர் நித்திஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாணவர்களிடமும் தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்கள் அதிகநேரம் செல்போனில் `பிரீ பயர்' போன்ற அபாயகரமான ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் சமூக விரோத எண்ணங்கள் தலைதூக்கி படிப்பில் நாட்டம் குறைந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற சமூக விரோத ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தான் முக்கியம். அது தான் எதிர்கால இந்தியாவுக்கு நல்லது. எனவே, இதுபோன்ற சமூக விரோத ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்