வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆங்கில வழி கல்வி தொடக்கம்

வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-01 17:35 GMT
நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசித்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுத்தரப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்  நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, பிளஸ்-1 வகுப்பும் ஆங்கில வழியில் கற்றுத்தர உத்தரவு பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 ஆங்கில வழி வகுப்பு தொடக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 இதில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பள்ளி வளர்ச்சி குழு, தற்காலிக ஆசிரியர் நியமனம், ஊதியம் வழங்குவது, புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவராசு, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்