கிணத்துக்கடவு அருகே அனுமதியின்றி கல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

கிணத்துக்கடவு அருகே அனுமதியின்றி கல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-01 17:34 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கு உள்ள கல் குவாரிகளில் இருந்து கல், ஜல்லி உள்ளிட்டவைகள் அரசு அனுமதியின்றி கடத்தி செல்லப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன்பேரில், கோவை புவியியல் மற்றும் கனிம வளத்துறை சிறப்பு துணை தாசில்தார் மூர்த்தி ஆகியோர் வீரப்பகவுண்டனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். 

இதில் உரிய அனுமதி பெறாமல் லாரியில் கல் ஏற்றி சென்றது தெரியவந்தது. .இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 

மேலும் இதுகுறித்து சிறப்பு துணை தாசில்தார் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் லாரி டிரைவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 57) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்