பூண்டி ஏரியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார் மதகுகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு

பூண்டி ஏரியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு மதகுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார்.

Update: 2021-07-01 17:18 GMT
ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் வந்து சேரும் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பெறப்படும் தண்ணீர் ஆகியவை சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த நீரானது தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கோடை வெயில் காரணமாக ஏரி நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக்கொண்டனர்.

அதன்படி கடந்த மாதம் 13-ந்தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 16-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

திடீர் ஆய்வு

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று பூண்டி ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தார்.

அதற்கு முன்னதாக பூண்டி ஏரியில் இருந்து புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை திறந்து விடும் இணைப்பு மற்றும் பேபி கால்வாய்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ், சென்னை குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்