செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் செத்தன

ஆடுகள் செத்தன

Update: 2021-07-01 17:14 GMT
செஞ்சி, 
செஞ்சி அருகே உள்ள துடுப்பாக்கம் கிராம பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது காலனி பகுதி மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி அறுந்து அந்த வழியாக சென்ற சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அந்த 4 ஆடுகளும் செத்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்