பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது

கோவையில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 அழகிகள் மீட்கப்பட்டனர்.

Update: 2021-07-01 17:02 GMT
கோவை

கோவையில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 அழகிகள் மீட்கப்பட்டனர்.

மசாஜ் சென்டர்களில் விபசாரம்

கோவையில் வாலிபர்களை குறிவைத்து ஆன்லைன் மூலமாக தகவல் அனுப்பி மசாஜ் சென்டர்களில் வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அங்கு வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்த சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற விஜய் (வயது 32) என்ற புரோக்கரை கைது செய்தனர். அங்கு இருந்த அசாம், மணிப்பூர் நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் 2 அழகிகள்

இதேபோல் பீளமேடு போலீசார் மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் செயல்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர்.

 அங்கும் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. 
இதையடுத்து பெண் புரோக்கர் கலைவாணி (30), பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த நிர்மல்ராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். 

அங்கு இருந்த புலியகுளம், ரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 2 அழகி களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்