சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார்.

Update: 2021-07-01 16:59 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி ஜேசுகனி (வயது 36). இவர் சுப்பராயபுரம் விலக்கில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் ஜேசுகனி கடையில் இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். தங்களுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். உடனே, ஜேசுகனி அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில், அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேசுகனி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவங்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்