சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சிவபாரத இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தியும், தமிழக சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வடக்கு மாவட்ட தலைவர் முத்துகுமார், தூத்துக்குடி ஒன்றிய இளைஞர் அணி தலைவர் முத்து, மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.