ஹெல்மெட் லாக்கை மாட்டாமல் சென்றால் ஆபத்து நிச்சயம்

தலைதப்புவது தலைக்கவசம் அணிவதால் மட்டும் இல்லை, ஹெல் மெட் லாக்கை மாட்டாமல் சென்றால் ஆபத்து நிச்சயம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2021-07-01 16:45 GMT
கோவை

தலைதப்புவது தலைக்கவசம் அணிவதால் மட்டும் இல்லை, ஹெல் மெட் லாக்கை மாட்டாமல் சென்றால் ஆபத்து நிச்சயம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஹெல்மெட் கட்டாயம் 

தலைக்கவசம்... அது உயிர் கவசம்... எனவேதான் இருசக்கர வாகனங் களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இதை கண்காணிக்க கோவை மாநகர பகுதியில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையும் நடத்தி வருகிறார்கள். 
ஆனால் ஹெல்மெட் அணிபவர்கள் அதற்கான லாக்கை சரியாக மாட்டுவது இல்லை. இப்படி செல்லும்போது ஆபத்து ஏற்படுவது நிச்சயம் என்பதை அவர்கள் அறிய வேண்டும். 

லாக் மாட்டுவது இல்லை 

தற்போது 90 சதவீதம் பேருக்கு ஹெல்மெட் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இது நல்லதுதான். ஆனால் அதில் 80 சதவீதம் பேர் அதற்கான லாக்கை மாட்டாமல் செல்வதுதான் வேதனை அளிக்கிறது. 

இதனால் விபத்து ஏற்படும் போது தலைக்கவசம் தனியாக கழண்டு, தலைக்காயம் ஏற்பட்டு தலையெழுத்து மாறிவிடுகிறது. விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர்களுக்கு மட்டும்தான் ஹெல்மெட் லாக்கின் முக்கியத்துவம் புரிகிறது.

உணர வேண்டும் 

எனவே விபத்தில் சிக்கும்போது தலை தப்புவது ஹெல்மெட் அணிவதால் மட்டுமல்ல, அதில் உள்ள லாக்கையும் சரியாக மாட்ட வேண்டும் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும். 

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசாருக்கு பயந்துதான் பலர் ஹெல்மெட் போடுகிறார்கள். இது ஒருவிதத்தில் நல்லதுதான். 

ஆனால் அதற்கான லாக்கையும் சரியாக மாட்ட வேண்டும். அதையும் கண்காணித்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதுடன், உரிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்