வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது
ழ்வேளூர் அருகே வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 டிராக்டர், பொக்லின் எந்திரத்தைபறிமுதல் செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 டிராக்டர், பொக்லின் எந்திரத்தைபறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
கீழ்வேளூர் அருகே பூலாங்குடி கிராமம் மஞ்சாங்கன்னி வாய்க்காலில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கீழ்வேளுர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சாங்கன்னி வாய்க்காலில் களிம்பு மண்ணை 2 டிராக்டரில் 4 பேர் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள், குருக்கத்தி, காமராஜ் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் அய்யப்பன் (வயது 21), பூலாங்குடி வடக்குதெருவை சேர்ந்த சுந்தரம் மகன் கந்தகுமார் ( 35), குருமனாங்குடி மேலத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மாரிமுத்து ( 30), கீழ்வேளூர், வெள்ளந்திடலை சேர்ந்த ராஜா ( 49) என்பதும், இவர்கள் அனுமதியின்றி வாய்க்காலில் மண் அள்ளியதும் தெரிய வந்தது.
4 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்கள் மற்றும் 1 பொக்லின் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.