காரிமங்கலம், பாப்பாரப்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காரிமங்கலம், பாப்பாரப்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரிமங்கலம்:
காரிமங்கலம், பாப்பாரப்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
காரிமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய கூலி தொழிலாளர் அணி நிர்வாகி முருகேசன், உறுப்பினர்கள் பச்சையம்மாள், சாந்தகுமார், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி பஸ் நிலையம் அருகில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு் கட்சி வட்டார செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, சக்திவேல், சண்முகம், லோகு, சிலம்பரசன், குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா நிவாரண நிதி ரூ.7,500 வழங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும். பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் முகிலன் நன்றி கூறினார்.
----