2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

2 சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-07-01 15:01 GMT
வேலூர்

பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழன் (வயது 34). இவர் சாராயம் விற்ற வழக்கில் பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதேபோன்று குடியாத்தம் தாலுகா செட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் (31) சாராயம் விற்ற வழக்கில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

முத்தமிழன், சரண்ராஜ் ஆகியோர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்