மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதல்
மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதல்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒசஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்(வயது 35). இவரது நண்பர் சங்கர். இவர்கள் 2 பேரும், ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அவர்களுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மகேஷ் சிகிச்சைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கும், சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.