தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை மீண்டும் தொடங்கியது

தூத்துக்குடி-பெங்களூரு இடைேய நேற்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

Update: 2021-07-01 14:31 GMT
தூத்துக்குடி:
கொரோனா பரவலுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு படிப்படியாக விமான சேவை குறைக்கப்பட்டது. தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னைக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் விமான சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. நேற்று பெங்களூரில் இருந்து மதியம் 12 மணிக்கு 28 பயணிகளுடன் விமானம் வந்தது. பின்னர் 44 பயணிகளுடன் 12.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பெங்களூருக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து பல விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்