தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக பதவியேற்பு: சைலேந்திர பாபுவுக்கு கி.வீரமணி வாழ்த்து

தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக பதவியேற்பு: சைலேந்திர பாபுவுக்கு கி.வீரமணி வாழ்த்து.

Update: 2021-07-01 14:18 GMT
சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக பொன்.குமார் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்திருப்பது மிகவும் சிறப்பான முடிவு, வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழக போலீஸ்துறையின் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபுவை முதல்-அமைச்சர் தேர்வு செய்து நியமித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகும். இவர், நேர்மையான அதிகாரி. தமிழர் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, இவரை போன்றவரை தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யாக நியமனம் செய்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பேற்பவர்களுக்கு இதயகனிந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்